அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா


அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு அருகே அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த தென்னடார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் வானவில் மன்றம், அறிவியல் கழகம் மற்றும் இல்லம் தேடி கல்வி இணைந்து கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் நோக்கத்திலும், அறிவியலில் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக இந்த மாதம் முதல் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா என்னும் தலைப்பில் 30 கிராமங்களில் நடைபெற உள்ளது. அதன்படி தென்னடார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் இந்த அறிவியல் திருவிழாவை தொடங்கி வைத்தார். இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் அரசமணி, ஊராட்சி மன்ற தலைவர் தேவி செந்தில்ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் திருமாவளவன் வரவேற்றார். நிகழ்ச்சியில் வட்டார மேற்பார்வையாளர் அசோக்குமார், ஆசிரியர் பயிற்றுனர் ஆறுமுகம், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்புவேல், வானவில் மன்ற கருத்தாளர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டர்.


Next Story