தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு


தேசிய குழந்தைகள் அறிவியல்  மாநாடு
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு நடைபெற்றது.

சிவகங்கை

காளையார்கோவில்,

சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு காளையார்கோவிலில் நடைபெற்றது. மாநில பொருளாளர் ஜீவானந்தம் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். குழந்தை விஞ்ஞானிகளின் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. உதவி பேராசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். பரிசளிப்பு நிறைவு விழா மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் சேகர், செயலாளர் வீரபாண்டி, மாநில துணை தலைவர் முத்துலட்சுமி, செயலாக்கக்குழு உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி வரவேற்றார். கவுரவ தலைவர் சாஸ்தா சுந்தரம் அறிமுக உரையாற்றினார். காளையார்கோவில் வட்டார கல்வி அலுவலர்கள் சகாய செல்வன், ஆலிஸ்மேரி சிறப்புரையாற்றினார்கள். அறிவியல் ஆய்வு கட்டுரைகளுக்கான முடிவை மாவட்ட, ஒருங்கிணைப்பாளர் சதீஷ் அறிவித்தார். இதில் மொத்தம் 86 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில் 9 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் ரகுநாதன் நன்றி கூறினார்.


Next Story