டீ நன்றாக இல்லை என கூறி ஊழியரை கத்தியால் குத்திய வாலிபர்


டீ நன்றாக இல்லை என கூறி   ஊழியரை கத்தியால் குத்திய வாலிபர்
x

ஓசூர் அருகே டீ நன்றாக இல்லை என கூறி ஊழியரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் ஜாபர் தெருவை சேர்ந்தவர் ரியாஸ் பாஷா. இவர், ஓசூரில் ராயக்கோட்டை சாலையில், டீக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் ஷெனான் (வயது 34) என்பவர் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த கடைக்கு ஓசூர் சாந்தி நகரை சேர்ந்த சமீர் அமத் (25) என்பவர் டீ குடிக்க வந்தார். பின்னர், ஷெனானை அழைத்து, டீ நன்றாக இல்லை என கூறி அவரிடம் தகராறு செய்து திடீரென கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த ஷெனான், சிகிச்சைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில், ஓசூர் டவுன் போலீசார், சமீர் அமத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story