பேரிகை அருகே மதுபோதையில் மாமியார் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து
பேரிகை அருகே மதுபோதையில் தொழிலாளி மாமியார் உள்பட 2 பேருக்கு கத்தியால் குத்தினார்.
கிருஷ்ணகிரி
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே சிந்தலன்தொட்டியை சேர்ந்தவர் ராமன் (வயது26). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அனிதா (22). ராமனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அனிதா அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று ராமன் மாமியார் வீட்டுக்கு மதுபோதையில் சென்று உள்ளார். அப்போது ராமனுக்கும், அவரது மாமியார் சின்னத்தாயம்மா (44) வுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர், மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியாரை குத்தினார். இதை, தடுக்க வந்த உறவினர் வெங்கடேஷ் என்பவரையும் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த 2 பேரும் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story