விஷம் குடித்து சிற்ப கலைஞர் தற்கொலை
தக்கலை பஸ்நிலையத்தில் விஷம் குடித்து சிற்ப கலைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
தக்கலை:
தக்கலை பஸ்நிலையத்தில் விஷம் குடித்து சிற்ப கலைஞர் தற்ெகாலை செய்து கொண்டார்.
ஆண் பிணம்
தக்கலை பஸ்நிலையத்தில் நேற்று காலையில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக தக்கலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
சிற்ப கலைஞர்
விசாரணையில் இறந்து கிடந்தவர் நெல்லை மாவட்டம் பணகுடி, சர்வேதியர் தெருவை சேர்ந்த முருகன்(வயது 51) என்பது தெரியவந்தது. மேலும் இவர், தனது மகன் லெட்சுமணனுடன் நாகர்கோவில் புத்தேரியில் தங்கியிருந்து வில்லுக்குறியில் உள்ள ஒரு கல்லுப்பட்டறையில் சிற்ப கலைஞராக வேலை செய்து வந்தார். லெட்சுமணன் அப்பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லுக்குறியில் நடந்த ஒரு விபத்தில் படுகாயமடைந்த முருகன் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் முருகனுக்கு சிகிச்சை முடிந்ததால் அவரை லெட்சுமணன் அழைத்துக்கொண்டு நாகர்கோவிலுக்கு பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முருகன், தான் பிறகு வீட்டுக்கு வருவதாக கூறி தக்கலை பஸ்நிலையத்தில் இறங்கியுள்ளார். அதன்பிறகு இரவு முருகன் விஷம் குடித்து தற்கொலை கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.