தேன்கனிக்கோட்டை அருகே மது போதையில் தகராறு:லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு


தேன்கனிக்கோட்டை அருகே மது போதையில் தகராறு:லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு
x
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தளி அருகே உள்ள கொடகாரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் சூடப்பா (வயது 45). லாரி டிரைவர். அப்பகுதியை சேர்ந்தவர் அஸ்வத்ரெட்டி (46). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மதகொண்டப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சூடப்பாவின் வீட்டிற்கு சென்று அஸ்வத்ரெட்டி தகராறு செய்துள்ளார். அப்போது போதையில் அரிவாளால் சூடப்பாவின் தலையில் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் தேன்கனிக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக தளி போலீசில் சூடப்பா புகார் செய்தார். இதையடுத்து அஸ்வத்ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story