எலக்ட்ரானிக் கடை ஊழியருக்கு அரிவாள் வெட்டு


எலக்ட்ரானிக் கடை ஊழியருக்கு அரிவாள் வெட்டு
x

எலக்ட்ரானிக் கடை ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருப்பத்தூர்

ஆம்பூர் அடுத்த அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 29). பெயிண்டர். இவர் ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள எலக்ட்ரானிக் கடையில் பணியாற்றும் ஊழியரான அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்தை (25) என்பவரை வெளியே அழைத்து வருமாறு, சாலையில் சென்று கொண்டிருந்த சிறுவனிடம் கூறியுள்ளார். அதன்படி சிறுவன் சென்று கூறியதும், அரவிந்த் வெளியே வந்துள்ளார்.

அவரிடம், சதீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அது கைகலப்பாக மாறியது. அப்போது சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அரவிந்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் அரவிந்த் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரை கடை ஊழியர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் டவுன் போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து சதீஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story