பெட்ரோல் பங்க் ஊழியருக்கு அரிவாள் வெட்டு
பழவூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
வடக்கன்குளம்:
பழவூரை சேர்ந்த மாடசாமி என்பவருடைய மகன் மீனாட்சி (வயது 26). இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக விஸ்வநாதபுரத்தில் உள்ள பங்கிற்கு சென்றுள்ளார். அங்கு சங்கனாபுரத்தை சேர்ந்த சுடலையாண்டி மகன் மகேஸ்வரன் (24) என்பவர் பம்பு ஆபரேட்டராக உள்ளார். அவர் பெட்ரோல் பம்பை சரிசெய்துகொண்டு இருந்தார். பெட்ரோல் போடுவதற்கு காலம் தாழ்த்தியதால் ஆத்திரம் அடைந்த மீனாட்சி தன்னிடம் இருந்த அரிவாளால் மகேஸ்வரனை வெட்டியுள்ளார். இதில் அவரது வலதுகாலில் காயம் ஏற்பட்டது. மேலும் மகேஸ்வரன் வைத்திருந்த பணப் பையையும் பிடுங்க முயற்சித்துள்ளார். பின்னர் அங்கிருந்து மகேஸ்வரன் தப்பிச் சென்றார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாட்சியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story