பெயிண்டருக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
பெயிண்டரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி
மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலம் ஊராட்சி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி (வயது 57). பெயிண்டரான இவர் வீட்டின் முன்பு படுத்து இருந்தார். அப்போது, முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த செப்டிக் டேங்க் கிளீனராக வேலை செய்து வரும் பரமசிவம் மகன் ஆறுமுகம் (28) என்பவர் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்குள் புகுந்து அவரின் தலை, முதுகு, தோள்பட்டை உள்பட பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டினார். இதை தடுக்க வந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ஜனனம் என்பவரையும் அரிவாளால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story