ஒர்க் ஷாப் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு


ஒர்க் ஷாப் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 7 Aug 2023 12:15 AM IST (Updated: 7 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ஒர்க் ஷாப் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் ஒர்க் ஷாப் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாக்குவாதம்

கொட்டாரம் அருகே உள்ள மந்தாரம்புதூரை சேர்ந்தவர் தனேஷ் (வயது 32). நாகர்கோவில் சற்குண வீதியில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவருடைய நண்பரான அனிஷ் என்பவர் சம்பவத்தன்று இரவு இளங்கடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த தர்பார் உசேன், ஆசிப், மீரான், சாஜித் மற்றும் சலாம் ஆகியோர் அனிசை தடுத்து நிறுத்தி கேட்டுள்ளனர். இதனால் அனிசுக்கும், தர்பார் உசேன் உள்ளிட்டோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அனிஷ் அங்கிருந்து சென்றுவிட்டார்.

8 பேர் மீது வழக்கு

இந்தநிலையில் அனிசை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு தனேஷ் சென்றார். அப்போது தர்பார் உசேன் உள்ளிட்ட 5 பேரும் அங்கு வந்து அனிஷ் பற்றி தனேஷிடம் விசாரித்தனர். ஆனால் அதற்கு தனேஷ் பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தர்பார் உசேன், ஆசிப், மீரான், சாஜித், சலாம் மற்றும் 3 போ் என மொத்தம் 8 பேர் சேர்ந்து தனேஷை அரிவாளால் வெட்டினர்.

இதில் படுகாயம் அடைந்த தனேஷ் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கோட்டார் போலீசில் தனேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் தர்பார் உசேன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story