முதியவருக்கு அரிவாள் வெட்டு


முதியவருக்கு அரிவாள் வெட்டு
x

சிவகாசியில் முதியவரை அரிவாளால் வெட்டினர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள எரிச்சநத்தம் பர்மா காலனியை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 56). இவர் தனது வீட்டின் முன்பு உட்கார்ந்து இருந்த போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி மகன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆபாசமாக பேசி உள்ளார். இதனை பரந்தாமன் கண்டித்தும் கேட்காததால் அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சிறிது நேரத்தில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிருஷ்ண மூர்த்தியை கண்டித்துவிட்ட காலையில் போலீஸ் நிலையம் வர உத்தரவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, அரிவாளால் பரந்தாமனை தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து பரந்தாமன் கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story