தனியார் பஸ் கண்டக்டருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது


தனியார் பஸ் கண்டக்டருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது
x

தனியார் பஸ் கண்டக்டருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 21). தனியார் பஸ் கண்டக்டர். இவருக்கும், மற்றொரு பஸ் கண்டக்டர்களான சுத்தமல்லியை சேர்ந்த தாமரைகண்ணன் என்ற மதன் (27), மேல பாப்பாக்குடியை சேர்ந்த நம்பிராஜன் என்ற சுந்தர் (20) ஆகியோருக்கும் பஸ்சில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில் பஸ்சில் சுப்பிரமணியன் வந்தபோது, அந்த பஸ்சில் ஏறிய தாமரைகண்ணன், நம்பிராஜன் ஆகியோர் சேர்ந்து அவரை தகாத வார்த்தையால் பேசி, அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமரைகண்ணன், நம்பிராஜன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


Next Story