விவசாயிக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது
விவசாயியை அரிவாளால் வெட்டியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 60). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமியின் மகன் லெனின்பாஸ்கர், மகேந்திரன் மகன் பிரேம்குமார் (31) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த லெனின் பாஸ்கர் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் பன்னீர்செல்வத்தை தகாத வார்த்தையால் திட்டி அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லெனின் பாஸ்கர், பிரேம்குமார் ஆகியோரை கைது செய்து, அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.