எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தி்ண்டிவனத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம்

திண்டிவனம்:

திண்டிவனம் தாலுகா அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம்கள் மற்றும் நபிகள் நாயகத்தை பற்றி அவதூறாக பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்யக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் சையத் அசன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முகமது அகமது தொகுப்புரை வழங்கினார். தொகுதி தலைவர் ஹாஜா முகைதீன் வரவேற்றார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு மாநில தலைவர் ஆபிரூதீன்மன்பா கண்டன உரையாற்றினார். இதில் ஹஜ்ரத் ஜமாஅத்துல் உலமா சபை திண்டிவனம் தலைவர் மவுலானா மவுலவி அபிபுல்லா, இருளர் பாதுகாப்பு பேரவை தலைவர் பிரபா கல்விமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி இன்பஒளி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன், நவாப் பள்ளிவாசல் முத்தவல்லி வக்கீல் அஜ்மல், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் உள்பட பலர் சிறப்புரையாற்றினர். முடிவில் நகர துணை தலைவர் சையத் பர்கத்அலி நன்றி கூறினார்.


Next Story