எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம்
களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
களக்காடு:
களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பீர்மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா வரவேற்றார். அமைப்பு பொதுச்செயலாளர் பத்தமடை சிராஜ், பொருளாளர் இளையராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகம்மது ஷபி, வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் அம்பை ஜலில் ஆகியோர் முன்னிலை வகித்தனார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினரும், மண்டல தலைவருமான நாஞ்சில் சுல்பிகர் அலி கலந்து கொண்டு பேசினார். இதில் அம்பை தொகுதி தலைவர் செய்யது, தொகுதி செயலாளர் சிந்தா கொடி, நாங்குநேரி தொகுதி தலைவர் ஆசிக், ராதாபுரம் தொகுதி தலைவர் தவுபிக் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட செயலாளர் சுலைமான் நன்றிகூறினார்.
Related Tags :
Next Story