எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

சங்கராபுரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சங்கராபுரம் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தாஹிர்அலி, ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி தலைவர் இப்ராஹிம் ஷெரீப், தொகுதி செயலாளர் சிராஜ்தீன், தொகுதி பொருளாளர் அக்பர், சங்கராபுரம் நகர தலைவர் ஆசாத்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் சையத்கவுஸ் வரவேற்றார். மாவட்ட தலைவர் முகமத்ரபி, மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் சிராஜ்தீன், மாவட்ட செயலாளர் தர்பார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் காதர், நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story