200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்


200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி பகுதியில் வீட்டில் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக கடலோர போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து தேவிபட்டினம் கடலோர காவல் நிலைய போலீசார் திருப்பாலைக்குடி கிழக்குதெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.அப்போது அந்த வீட்டில் பதுக்கிய சுமார் 200 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.


Related Tags :
Next Story