அனுமதியற்ற 52 மது பார்களை பூட்டி 'சீல்'


அனுமதியற்ற 52 மது பார்களை பூட்டி சீல்
x

திருப்பூர் மாவட்டத்தில் அனுமதியற்ற 52 மது பார்களை பூட்டி ‘சீல்’வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் அனுமதியற்ற 52 மது பார்களை பூட்டி 'சீல்'வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

10 பார்கள் மூடப்பட்டன

திருப்பூர் மாவட்டத்தில் அனுமதியற்ற மது பார்கள் செயல்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சிவக்கொழுந்து தலைமையில் டாஸ்மாக் அதிகாரிகள், மதுவிலக்கு போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனை செய்து அனுமதியற்ற பார்களை பூட்டி 'சீல்' வைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன்படி நேற்று முன்தினம் அவினாசி, பல்லடம், தாராபுரம் பகுதிகளில் அதிகாரிகள் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இதில் அவினாசியில் 2, பல்லடத்தில் 2, தாராபுரத்தில் 6 என மொத்தம் 10 பார்கள், லைசென்சு இல்லாமல் அனுமதியற்று செயல்படுவது கண்டறியப்பட்டது. அந்த பார்களை அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர்.

52 பார்களுக்கு 'சீல்'

இந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 52 அனுமதியற்ற மது பார்களை அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். திருப்பூர் மாநகர பகுதிகளில் அனுமதியற்ற பார்கள் செயல்படவில்லை என்றும், மாவட்ட பகுதிகளில் புகார்கள் வந்துள்ளன. தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அனுமதியற்ற பார்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று டாஸ்மாக் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story