புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்' வைப்பு
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார், பாளையங்கோட்டை உணவு பாதுகாப்பு அதிகாரி சங்கரலிங்கம் மற்றும் போலீசார் கடைகளில் நேற்று காலை சோதனை நடத்தினர். அப்போது தாழையூத்து ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஒரு கடையில் ஆய்வு நடத்தினர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் மணிகண்டனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த கடைக்கு தற்காலிகமாக 'சீல்' வைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story