புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்' வைப்பு
அச்சன்புதூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
தென்காசி
கடையநல்லூர்:
அச்சன்புதூர் அருகே பண்பொழி பகுதியில் கடை நடத்தி வருபவர் முருகையா மகன் கணேஷ். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சென்று சோதனை செய்ததில், அந்த கடையில் தொடர்ந்து புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சசி தீபா தலைமையில் அலுவலர்கள் முத்துராஜ், நாகசுப்பிரமணியன் ஆகியோர் அந்த கடைக்கு 'சீல்' வைத்தனர். அப்போது கணேஷ் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிகாரிகள் அச்சன்புதூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story