அனுமதியின்றி இயங்கிய சாயப்பட்டறைக்கு 'சீல்'


அனுமதியின்றி இயங்கிய சாயப்பட்டறைக்கு சீல்
x

அனுமதியின்றி இயங்கிய சாயப்பட்டறைக்கு ‘சீல்’

மதுரை

திருமங்கலம்

திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டியில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான இடத்தை தேனியை சேர்ந்த செந்தில் குத்தகைக்கு எடுத்துள்ளார். அந்த இடத்தில் அனுமதியின்றி சாயப்பட்டறையை கடந்த 8 மாதங்களாக நடத்தி வந்துள்ளார். இந்த பட்டறையில் வெளியூரை சேர்ந்த 5 பேர் பணி செய்து வந்துள்ளனர். சாயப்பட்டறையில் இருந்த கழிவுநீர் குழாய்கள் மூலமாக அருகேயுள்ள வயல்வெளிகள் மற்றும் ஓடையில் விடப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கலெக்டரின் உத்தரவுபடி திருமங்கலம் தாசில்தார் சிவராம், பன்னீர்குண்டு வருவாய் ஆய்வாளர் வனிதா, ஆகியோர் சென்று சாயப்பட்டறையை மூடி சீல் வைத்தனர். பட்டறையில் லோடு ஏற்றி வெளியே புறப்பட தயாராக இருந்த லாரியையும் பறிமுதல் செய்தனர்.


Next Story