பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'


பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்கு சீல்
x

பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’

திருப்பூர்

அவினாசி

அவினாசியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடப்பதாக பேரூராட்சிக்கு தகவல் தரப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் அலுவலர்கள் அவினாசியில் உள்ள மளிகை, பல சரக்கு, ஸ்டேசனரி உள்ளிட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவினாசி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 2 கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 620 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஒரு கடைக்கு ரூ.15 ஆயிரமும் மற்றொரு கடைக்கு ரூ. 50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ஒரு கடையில் ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள் விற்றதாக ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்த நிலையில் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்றதால் அந்த கடையை பூட்டி சீல் வைக்கப்பட்டதாக பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.



Related Tags :
Next Story