அனுமதியின்றி செயல்பட்ட கரி தயாரிக்கும் ஆலைக்கு 'சீல்'


அனுமதியின்றி செயல்பட்ட கரி தயாரிக்கும் ஆலைக்கு சீல்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கரி தயாரிக்கும் ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள சுஞ்சப்பன்பட்டி பகுதியில் திறந்த வெளியில் தேங்காய் கொட்டாங்குச்சிகளை எரித்து கரி தயாரிக்கும் தனியார் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கொட்டாங்குச்சிகளை எரிப்பதால் நிலம் மாசுபடுவதுடன், ஆலையில் இருந்து வெளியாகும் காற்றை சுவாசிப்பதால் அப்பகுதி மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார் கூறப்பட்டு வந்தது. இந்த ஆலை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிைலயில் நேற்று மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி அனிதா, வருவாய்த் துறை அதிகாரிகள், வேடசந்தூர் போலீசார் அந்த ஆலைக்கு வந்து திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த ஆலை உரிய அரசு அனுமதி பெறாமல் செயல்பட்டது தெரியவந்தது. ஆலையில் உரிமையாளர்கள் யாரும் இல்லை. இதனையடுத்து ஆலையில் தயாரித்து வைத்திருந்த கொட்டாங்குச்சி கரித்துகள்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி அதிகாரிகள் அழித்தனர். பின்னர் ஆலை செயல்படாத வகையில் எந்திரத்திற்கு 'சீல்' வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story