சிவகாசியில் அனுமதியின்றி இயங்கிய பட்டாசு குடோன்களுக்கு 'சீல்'


சிவகாசியில் அனுமதியின்றி இயங்கிய பட்டாசு குடோன்களுக்கு சீல்
x

சிவகாசியில் அனுமதியின்றி இயங்கிய பட்டாசு குடோன்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

சிவகாசி,

சிவகாசி பி.கே.எஸ்.ஏ. ஆறுமுகம் நாடார் சாலையில் அற்புதகுமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை உள்ளது. இவர் விற்பனைக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி வந்து அருகில் உள்ள குடோனில் சேமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தில் பட்டாசுகளை சேமித்து வைக்க தேவையான உரிமங்களை பெறவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சிவகாசி கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் காளிசரண், சிவகாசி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜா மற்றும் அதிகாரிகள் அந்த கட்டிடத்தை ஆய்வு செய்தனர். அங்கு பெட்டி, பெட்டியாக பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அந்த கட்டிடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து, பட்டாசு கடை உரிமையாளர் அற்புதகுமார் மீது கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீல் வைப்பு

மேலும் சிவகாசி கிழக்கு பகுதியில் ஆர்.எஸ்.ஆர்.நகரில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை உள்ளது. இந்த கடையின் உரிமத்தை புதுப்பிக்காத நிலையில் வழக்கம்போல் பட்டாசு கடை இயங்கி வந்தது. வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் உத்தரவின் பேரில் அந்த பட்டாசு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.


Next Story