தூத்துக்குடியில் நடைபாதையை சேதப்படுத்தி பேனர் வைத்த ஒப்பந்தக்காரர் கடைக்கு சீல்வைப்பு

தூத்துக்குடியில் நடைபாதையை சேதப்படுத்தி பேனர் வைத்த ஒப்பந்தக்காரர் கடைக்கு சீல்வைப்பு
x

தூத்துக்குடியில் நடைபாதையை சேதப்படுத்தி பேனர் வைத்த ஒப்பந்தக்காரர் கடைக்கு மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடைபாதையை சேதப்படுத்தி பேனர் வைத்த ஒப்பந்தக்காரர் கடைக்கு மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

அதன்படி அண்ணாநகர் பகுதியில் ஸ்மார்ட் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் சாலையோரத்தில் நடைபாதையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் கொடை விழாவை முன்னிட்டு கோவில் அருகே விளம்பர பேனர் வைக்கப்பட்டு உள்ளது.

சாலையை சேதப்படுத்தி பேனர்

இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள நடைபாதையின் பேவர் பிளாக் தளத்தை சேதப்படுத்தி கம்புகள் நடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட ஒப்பந்தக்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.

ஒப்பந்தக்காரர் கடைக்கு சீல்வைப்பு

இதன்பேரில் நகர்நல அலுவலர் அருண்குமார் மேற்பார்வையில், சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன், வருவாய் ஆய்வாளர் ஜான்சன் மற்றும் ஊழியர்கள் நேற்று தூத்துக்குடி அண்ணாநகரில் உள்ள, பேனர் அமைத்த பந்தல் ஒப்பந்தக்காரரின் கடைக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story