நெல்லையப்பர் கோவில் கடைகளுக்கு சீல் வைப்பு


நெல்லையப்பர் கோவில் கடைகளுக்கு சீல் வைப்பு
x

உள் வாடகைக்கு விட்டதால் நெல்லையப்பர் கோவில் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை டவுனில் நெல்லையப்பர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட சொத்துகள் ஏராளமாக உள்ளன. கோவிலை சுற்றி பல கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. நெல்லையப்பர் கோவில் அருகே கீழரதவீதியில் கோவிலுக்கு சொந்தமான கடையை ஒருவர் வாடகைக்கு எடுத்து கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் தினசரி வாடகை என்ற பெயரில் அந்த கடையை 3 நபர்களுக்கு பூக்கடை நடத்த உள்வாடகைக்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்ததும் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தலைமையில் கோவில் ஊழியர்கள் அங்கு சென்று கடைக்கு 'சீல்' வைத்தனர். மேலும் அந்த கடையில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்.


Next Story