புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்


புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மொரப்பூர் மற்றும் கடத்தூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.

தர்மபுரி

மொரப்பூர் மற்றும் கடத்தூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.

புகையிலை பொருட்கள்

மொரப்பூர் மற்றும் கடத்தூர் பகுதிகளில் உள்ள மளிகை மற்றும் பீடா, பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பெனாசீர் பாத்திமா தலைமையில் மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் மொரப்பூர் ஒன்றியம் ஆலமரத்தும்பட்டி அடுத்த கசியம்பட்டி பஸ் நிலையம் அருகில் ஒரு மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

2 கடைக்கு சீல்

இதேபோன்று கடத்தூர் பஸ் நிலையம் அருகில் புதுரெட்டியூர் ரோட்டில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தலைமையில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நந்தகோபால் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் 2 கடைகளுக்கும் தலா ரூ.5000 அபராதம் விதித்தனர். மேலும் அந்த 2 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். மறு உத்தரவு வரும் வரை கடைகளை திறக்க கூடாது என்று அவர்கள் எச்சரிக்கை நோட்டீசுகளை கடைகளின் சுவர்களில் ஒட்டினர்.


Next Story