சீமான் உருவ பொம்மை எரித்து போராட்டம்
கோவில்பட்டியில் சீமான் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்புலிகள் கட்சியினர் எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அருந்ததியர் சமூகத்தினரை அவதூறாக பேசியதை கண்டித்தும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரியும் நேற்று தமிழ்புலிகள் கட்சியினர் கோவில்பட்டி வீரன் சுந்தரலிங்கம் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினா். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணை தலைவர் பீமாராவ், மாவட்ட செயலாளர் தமிழரசு, மாவட்ட செய்தி தொடர்பாளர் கனியமுதன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ஜெயராம், முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சீமான் உருவப் பொம்மையை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினா். இதை தொடர்ந்து வீரபெருமாள் உள்ளிட்ட அக்கட்சியினர் 8 பேரை கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story