புதிய டுவிட்டர் கணக்கை தொடங்கினார் சீமான்
தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. என பதிவிட்டுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் டுவிட்டர் கணக்கு நேற்று திடீரென முடக்கப்பட்டது. சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டு இருந்தது.இதற்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் 'செந்தமிழன் சீமான்' எனும் புதிய டுவிட்டர் கணக்கை அவர் தொடங்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள முதல் பதிவில் ,
கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை முடக்கி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story