விசுவ இந்து பரிஷத் செயலாளர் கைது


விசுவ இந்து பரிஷத் செயலாளர் கைது
x

விசுவ இந்து பரிஷத் செயலாளர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்ட விசுவ இந்து பரிஷத் செயலாளராக இருப்பவர் முத்துவேல்(வயது 45). இவர், தன்னுடைய முகநூல் பக்கத்தில், பிற மத கடவுளை தவறாக சித்தரித்து, இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும் விதமாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பதிவிட்டுள்ளதாக அரியலூர் கிராம நிர்வாக அலுவலர் நந்தகுமார், அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் முத்துவேல் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மதங்களை இழிவுபடுத்துதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story