மதசார்பற்ற ஜனதாதள கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மதசார்பற்ற ஜனதாதள கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மதசார்பற்ற ஜனதாதள கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி

ஊட்டி,

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்த மத்திய அரசை கண்டித்தும் நீலகிரி மாவட்ட மதசார்பற்ற ஜனதாதள கட்சி சார்பில் ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி, பால் போன்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தினர். கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story