பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஒத்திகை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை,
பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) சென்னைக்கு வருகிறார். பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன முனையத்தைப் பார்வையிடுகிறார்.
சென்னை-கோவை இடையே ஓட உள்ள அதிவேக ரெயிலான 'வந்தே பாரத்' ரெயில் சேவையை அவர் தொடங்கிவைக்கிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் போலீசாரின் பாதுகாப்பு ஒத்திகை நடக்கிறது.. விமான நிலையத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரை பாதுகாப்பு ஒத்திகை நடக்கிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story