ரெயில்களில் பாதுகாப்பு படை போலீசார் சோதனை

ரெயில்களில் பாதுகாப்பு படை போலீசார் சோதனை
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர்.

திருவண்ணாமலை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பஸ்கள் மற்றும் ெரயில்களில் ஆபத்து விளைவிக்கக் கூடிய பட்டாசு பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை ரெயில் நிலையம் வழியாக சென்ற ரெயில்களில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ரெயில்களில் வந்த பயணிகளின் உடைமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது. ஆபத்து விளைவிக்கும் வகையில் பட்டாசு பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா என்று சோதனை செய்தனர்.

இதனால் திருவண்ணாமலை ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story