மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகையை முன்னிட்டு, வேலூரில் பலத்த பாதுகாப்பு
வேலூர், திருப்பத்தூர் உள்பட 4 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .
சென்னை,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று சென்னை வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் வியூகமாக, தென்சென்னை பா.ஜ.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் வகையில் மத்திய மந்திரி அமித்ஷா இன்று சென்னை வருகிறார்.மேலும் வேலூரில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று அவர் பேசுகிறார்.
இந்த நிலையில் அமித்ஷா வருகையை முன்னிட்டு, வேலூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர் உள்பட 4 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .
சிஆர்பிஎப் வீரர்கள், காவலர்கள் என 1,400 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . பொதுக்கூட்ட மேடைக்கு பின்புறம் சிறப்பு இலக்கு படை பிரிவு முகாமிட்டு கண்காணிக்கிறது.வெடிகுண்டு பரிசோதனை குழுக்கள் மோப்ப நாயுடன் 15 பிரிவாக பிரிந்து சோதனை நடத்துகின்றனர்.
Related Tags :
Next Story