வேளாண் அறிவியல் நிலையத்தில் விதை கண்காட்சி
தர்மபுரி
பாப்பாரப்பட்டி:-
பாப்பாரபட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மாணவிகளின் விதை கண்காட்சி நடந்தது. கண்காட்சியை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விதை மைய இயக்குனர் உமாராணி தொடங்கி வைத்து செயல்விளக்க மாதிரிகளை பார்வையிட்டார். வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் வைத்திருந்த கண்காட்சியில் பல்வேறு வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் சிறுதானிய வகைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
மேலும் பொறிகள், உயிர் உரங்கள், திரவ உயிர் உரங்கள், காளான் வித்து ஆகியவையும் இடம்பெற்று இருந்தன. மாணவிகளிடம் பாரம்பரிய ரகங்களை குறித்து விதை தொழில்நுட்பத் துறை பேராசிரியர் நெல்சன், திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா ஆகியோர் கலந்துரையாடினர்.
Related Tags :
Next Story