வாரச்சந்தையில் மாட்டு இறைச்சி கடை வைக்க அனுமதி கோரிவிடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வாரச்சந்தையில் மாட்டு இறைச்சி கடை வைக்க அனுமதி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.
ஈரோடு
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை பகுதியில் மாட்டு இறைச்சி கடைகள் நடத்த அனுமதி கோரி ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார். பவானிசாகர் சட்டமன்ற தொகுதி செயலாளர் தம்பிராஜன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, தலைமை நிலைய செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை பகுதியில் ஏற்கனவே கடை வைத்திருந்த கடைக்காரர்களுக்கு மீண்டும் மாட்டு இறைச்சி கடை வைக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story