ம.தி.மு.க.வினருடன் மோதிய வழக்கில் சீமான் விடுதலை


ம.தி.மு.க.வினருடன் மோதிய வழக்கில் சீமான் விடுதலை
x

ம.தி.மு.க.வினருடன் மோதிய வழக்கில் சீமான் விடுதலை.

திருச்சி,

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு ஒரே விமானத்தில் திருச்சிக்கு வந்தனர். அப்போது விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த இருகட்சியினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து ம.தி.மு.க.வினர் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கு திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண்-6 கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சிவக்குமார் நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் இருந்து சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 14 பேரை விடுவித்து உத்தரவிட்டார். இதையொட்டி சீமான் கோர்ட்டில் ஆஜரானார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்த வழக்கு, அடுத்த மாதம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.


Next Story