முதல் அமைச்சர் விரைவில் குணமடைய சீமான், அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து


முதல் அமைச்சர் விரைவில் குணமடைய சீமான், அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 12 July 2022 1:26 PM GMT (Updated: 12 July 2022 1:39 PM GMT)

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனாவிலிருந்து குணமடைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதாக மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய வேண்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

"மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள செய்தியறிந்தேன். அவர் நோய்த்தொற்றிலிருந்து விரைந்து குணமாகி, முழுஉடல்நலத்தோடு பொதுப்பணிகளைத் தொடர வேண்டுமெனும் பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்!" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.

அதேபோல, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்". என்று டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.


Next Story