சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகள் சிலரின் டுவிட்டர் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டது.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகள் சிலரின் டுவிட்டர் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டது. இது கட்சி நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து, டுவிட்டர் நிறுவனம் பதில் அளித்துள்ளது. இதனை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டு உள்ளது. அந்த கடிதத்தில், ''வெளிப்படைத்தன்மையின் நலனுக்காக, அதை உங்களுக்கு தெரிவிக்க எழுதுகிறோம். உங்கள் (சீமான்) டுவிட்டர் கணக்கு குறித்து இந்திய அரசிடம் இருந்து டுவிட்டர் அதிகாரப்பூர்வ கடிதங்களை பெற்றுள்ளது. உங்கள் கணக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 விதியை மீறுவதாக உள்ளது என கடிதங்கள் கூறுகின்றன'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story