சீராத்தம்மன் கோவில் தேரோட்டம்
ஓங்கூரில் சீராத்தம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே ஓங்கூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சீராத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர்திருவிழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து எல்லை கட்டுதல் நிகழ்ச்சி, ஊரணி பொங்கல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை 9.30 மணிக்கு சீராத்தம்மனுக்கும், பரமேஸ்வரர்சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து 10 மணிக்குஅலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம் பி்டித்து இழுத்தனர். தேர்முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story