மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட 400 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்


மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட 400 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்
x

திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட 400 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் அடையார் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். உடனே அதில் வந்த 2 மர்ம நபர்களும் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனை செய்தபோது அதில் 400 புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனால் புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வரும் வழியில் மர்ம நபர்கள் போலீசுக்கு பயந்து மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளுடன் 400 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.


Next Story