350 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்


350 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
x

350 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்

ராமேசுவரம் சேரான் கோட்டை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல்அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து ராமேசுவரம் கடலோர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ், கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சேரான்கோட்டை பகுதியில் இருந்து வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சுமார் 350 கிலோ கடல் அட்டைகளை கடலோர போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்து வந்ததாக ஆட்டோ டிரைவர் பிரபு உள்ளிட்ட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலோர போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக ஆட்டோவில் ஏற்றி கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இவற்றின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் இருக்கும் என்றும் தெரிகிறது.


Next Story