சாராய கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 140 வாகனங்கள் ஏலம்


சாராய கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட  140 வாகனங்கள் ஏலம்
x

சாராய கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 140 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.

சேலம்

சேலம்,

சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த வகையில் 11 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 138 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 149 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் நேற்று சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம்விடப்பட்டன.

இந்த ஏலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் தொடங்கி வைத்தார். இதில் முன்பணம் செலுத்தி டோக்கன் பெற்றவர்கள் மட்டும் ஏலம் கேட்டனர். சில இருசக்கர வாகனங்களை எடுக்க இளைஞர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டது. நேற்று மொத்தம் 140 வாகனங்கள் ஏலம் போனது. ஒவ்வொரு வாகனத்தின் ஏலம் முடிவடைந்தவுடன் அதற்கான தொகையை பெற்று கொண்டு வாகனம் ஒப்படைக்கப்பட்டது.

ஏலம் விடும் நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, மதுவிலக்கு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story