அனுமதியின்றி செம்மண் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல்


அனுமதியின்றி செம்மண் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல்
x

அனுமதியின்றி செம்மண் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி தாலுகாவில் உள்ள நதிக்குடி கிராம நிர்வாக அலுவலர் சக்திகணேசன் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் நதிக்குடி கிராமத்தில் இருந்து செம்மண் கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது அந்த டிராக்டரில் இருந்த 2 பேர் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் கிராம நிர்வாக அதிகாரி சக்திகணேசன் அந்த டிராக்டரை ஆய்வு செய்த போது அதில் அனுமதியின்றி செம்மண் அள்ளி வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


Next Story