1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: 2 கடைக்காரர்களுக்கு அபராதம்

1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: 2 கடைக்காரர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

முத்தையாபுரம் அருகே கடை, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி

ஸ்பிக் நகர்:

முத்தையாபுரம் அருகே கடை, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அதிகாரிகள் சோதனை

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே அத்திமரப்பட்டி சாலையில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், தெற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டியன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அந்தப் பகுதியில் உள்ள கடைகள், குறிப்பிட்ட சில வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

1½டன் பிளாஸ்டிக் பறிமுதல்

அப்போது ஒரு கடை மற்றும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடைக்காரருக்கு ரூ.20 ஆயிரமும் வீட்டில் பதுக்கிய கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரமும் அதே இடத்தில் அபராத தொகை விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

ஆணையாளர் எச்சரிக்கை

மேலும் இதுபோல மாநகராட்சி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையாளர் எச்சரித்துள்ளார்.

Next Story