தடை செய்யப்பட்ட 120 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


தடை செய்யப்பட்ட 120 கிலோ  புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

திருவண்ணாமலையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 120 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை புகையிலை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை,


திருவண்ணாமலையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 120 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவல்

திருவண்ணாமலையில் பெட்டிக் கடை போன்ற சில்லறை விற்பனை கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்ந்து விற்கப்படுவதாகவும், அந்த கடைகளுக்கு பெங்களூருவில் இருந்து ஒருவர் புகையிலை பொருட்களை கொண்டு வந்து திருவண்ணாமலை அண்ணாநகர் பகுதியில் ஒரு வீட்டில் வைத்து அனைத்து கடைகளுக்கும் பிரித்து அனுப்புவதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

அந்த நபர் நேற்று முன்தினம் திருவண்ணாமலைக்கு பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.

இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கலேஷ்குமார், எழில்சிக்கையராஜா ஆகியோர் தலைமையிலான குழுவினர் திருவண்ணாமலை அண்ணாநகர் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

புகையிலை பொருட்கள் பறிமுதல்

அப்போது அண்ணாநகர் 9-வது தெருவில் உள்ள ஒரு மளிகை கடைக்காரர் வீட்டில் நேற்று முன்தினம் சிலர் ஆட்டோவில் வந்து சில பண்டல்களை இறக்கி விட்டு சென்று உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்தேகத்திற்குரிய வீட்டிற்கு நேரில் சென்று சோதனை நடத்தினர்.

அப்போது மளிகை கடைக்கு வந்த பொருட்களுடன் ஒரு பண்டலில் சுமார் 120 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்ட தகவலறிந்த நபர் புகையிலை பொருட்கள் உள்ள பண்டலையும் அங்கே வைத்து விட்டு சென்று இருக்கலாம் என்று தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 120 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி உணவு பாதுகாப்புத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.


Next Story