குடிநீர் உறிஞ்சிய 39 மோட்டார்கள் பறிமுதல்


குடிநீர் உறிஞ்சிய 39 மோட்டார்கள் பறிமுதல்
x

நெல்லை தச்சநல்லூர் மண்டலத்தில் குடிநீர் உறிஞ்சிய 39 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி பகுதியில் குடிநீர் குழாயில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி தச்சநல்லூர் உதவி செயற்பொறியாளர் லெனின் தலைமையில் ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக தொடர் ஆய்வில் ஈடுபட்டார்கள். இதில் மொத்தம் 39 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இதுகுறித்து ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறுகையில், நெல்லை மாநகராட்சி பகுதிகளில் 1.82 லட்சம் வீடுகளும், 5.33 லட்சம் மக்கள் தொகையும் உள்ளது. இங்கு 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளது. அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. மின் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுவதால் குழாய் இணைப்புகளில் நீர்கசிவு ஏற்படுவதுடன், மற்ற வீடுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் அவர்களாகவே குடிநீர் குழாயில் பொருத்தி உள்ள மின் மோட்டார்களை அகற்ற வேண்டும். இல்லை என்றால் மோட்டார்கள் பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கப்படும். மேலும் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும்'' என்றார்.


Next Story