480 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
480 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரி
புதுக்கடை:
புதுக்கடை அருகே உள்ள கடற்கரை கிராமங்களில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்தப்படுவதாக புதுக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து புதுக்கடை போலீசார் தேங்காப்பட்டணம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 180 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அம்சி பகுதியை சேர்ந்த பூமணி (வயது 65) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அங்கும் 300 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பூமணியை கைது செய்து 480 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story