600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

வேலூரில் பதுக்கி வைக்கப்பட்ட 600 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

வேலூர்

வேலூரில் பதுக்கி வைக்கப்பட்ட 600 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் அருகே உள்ள மேல்மொணவூர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் சத்தியமூர்த்திக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவர் தலைமையிலான குழுவினர் மேல்மொணவூர் பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அரசு ஐ.டி.ஐ. பின்புறம் உள்ள முட்புதரில் சந்தேகத்திற்கிடமாக சில மூட்டைகள் இருந்தது.

அதை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது அதில் கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

மேலும் ரேஷன் அரிசி பதுக்கி வைத்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story