கலப்பட டீசல் விற்க பயன்படுத்திய டேங்கர் லாரி பறிமுதல்
கலப்பட டீசல் விற்க பயன்படுத்திய டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர்
கருப்பம்பாளையம் நர்சரி கார்டன் எதிர்ப்புறம் கலப்பட டீசல் விற்பனை செய்யப்பட்டு வந்த தகவலின்பேரில், கரூர் குடிமைப் பொருள் வளங்கள் குற்ற புலனாய்வு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன் மற்றும் வருவாய்த்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்றிருந்த டேங்கர் லாரியை போலீசார் சோதனை செய்தபோது, அதில் கலப்பட டீசல் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்த அந்த லாரியை போலீசார் கைது செய்தனர். அப்போது அங்கிருந்த தப்பியோடிய மணிகண்டன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story